அமமுகவினர் வைத்த ஜெயலலிதா படத்தை திருடிச்சென்ற கும்பல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 07:15 pm
jayalaithaa-photo-missed

அமமுகவினர் வைத்திருந்த ஜெயலலிதா படத்தைக் காணவில்லை என்று அமமுக தரப்பினரிடமிருந்து புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் அமமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஜெயலலிதாவிற்கு அதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் அலங்கரித்து வைத்திருந்த ஜெயலலிதா படம் உடைக்கப்பட்டிருந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. அதற்கு அருகில் அமமுகவினர் வைத்திருந்த ஜெயலலிதா படத்தைக் காணவில்லை என்று அமமுக தரப்பினரிடமிருந்து புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இரு தரப்பினரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் திடீரென்று அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close