நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:00 am
sivakarthikeyan-takes-all-the-expenses-of-jayaraman-funeral

மறைந்த நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான செலவை நடிகர் சிவகார்த்திக்கேயன் ஏற்றுக்கொண்டார். 

புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். 

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர். முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.  

இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றும் நெல்ஜெயராமன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். 

அவர் சிகிச்சை பெற்று வந்த போது நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், அவரது சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார்.  இந்நிலையில் தற்போது நெல் ஜெயராமனின் உடலை  சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close