பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:33 am
tight-security-in-tamilnadu

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று தமிழகம் உட்பட முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், புறநகர்களை இணைக்கும் மின்சார ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உடமைகள் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்கள், பார்க்கிங் பகுதி, நுழைவு வாயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தைவிட அதிக போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகளுடன் வெண்டிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுப்பு படை உதவி ஆய்வாளர் ஞான ஆனந்த் தலைமையில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் 2,000 போலீசாரும், புறநகர் பகுதிகளில்  3000 போலீசாரூம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பல்வேறு ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close