இயற்கை விஞ்ஞானத்தை வளர்ப்பதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் அஞ்சலி - தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:28 am
for-the-development-of-natural-science-tamilisai

நெல் ஜெயராமன் பாதுகாத்த பயிர்களை பெருக்குவதும்,  இயற்கை விஞ்ஞானத்தை வளர்ப்பதுமே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணியளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் உள்ள ரெத்னா நகரில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல் ஜெயராமன் சிறு வயதிலேயே மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியவர், நல் விதைகளை விதைக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நம்மாழ்வாரால் வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். மிகப் பெரிய நெல் புரட்சியை நம்மிடையே விதைத்து விட்டு சென்றிருக்கிறார். அவர் பாதுகாத்த பயிர்களை பெருக்குவதும்,  இயற்கை விஞ்ஞானத்தை வளர்ப்பதுமே நாம் அவர்க்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும். அரசாங்கம் அவரது குடும்பத்தினருக்கு ஊக்கமாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும். பாஜக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close