நெற்கள் சேகரிக்கும் பணியை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:13 am
the-government-should-continue-to-work-on-the-collection-of-paddy-muthurasan

ஜெயராமன் மேற்கொண்ட நெற்கள் சேகரிக்கும் பணியை அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், "ஜெயராமன் இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு. விவசாய உணர்வோடு நாட்டிற்கு சேவையாற்றியவர். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மக்களுக்காக மகத்தான சேவையை செய்து வந்தார். மருத்துவமனையில் இருந்து வந்து நெல் திருவிழா நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இயற்கை அவரை அழைத்து கொண்டது. அரசு நிதி கொடுத்தால் மட்டும் போதாது. ஜெயராமன் மேற்கொண்ட பாரம்பரிய நெற்களை சேகரிக்கும் பணியை, அவரின் பெயரில் அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close