புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பா.ஜ.கவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூவருக்கும் அம்மாநில ஆளுநர் கிரண் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செல்லும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
newstm.in