நெல் ஜெயராமனின் மறைவுக்கு எச்.ராஜா இரங்கல்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:18 am

h-raja-condolences-to-jayaraman

புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். 

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர். முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.  

இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றும் நெல்ஜெயராமன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். 

இதையடுத்து அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாத்து அதை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மூலம் பயிரிடச்செய்த நெல் ஜெயராமன் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close