சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:37 am
swiggy-services-disrupted-in-parts-of-chennai-as-delivery-execs-protest-over-salary

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நின்று பேசக்கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் பணியாற்றி வரும் நமக்கு, வேண்டிய உணவு நம்மை தேடி வரும் வகையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து பெறும் வகையில் பல நிறுவனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இதில் ஸ்விக்கி தற்போது முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில், மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் இணைந்து செயல்படும் ஸ்விக்கியில், தற்போது டெலிவரி செய்யும் பணியில் மட்டும் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்விக்கியின் வளர்ச்சி பெருமளவில் உள்ளது. இந்நிலையில் சென்னை ஸ்விக்கியில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிகைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஸ்விக்கியில் வேலை செய்பவர்களுக்குத் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் ஆர்டர்களைப் பொறுத்தே சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும், இரவில் டெலிவரி செய்யும்போது போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாகவும், அது தொடர்பாக காவல் துறையினரிடம், ஸ்விக்கி நிர்வாகம் ஆலோசனை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இவர்களின் போராட்டத்தால் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தை பெருமளவில் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close