அமைச்சரவை ஒப்புதலுக்கு பின் 45 மாதங்களில் தோப்பூரில் எய்ம்ஸ் இயங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:03 pm
health-department-s-information-about-aiims-hospital-madurai

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது தெடர்பாக கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கையில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதிக்குழு ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. தொடர்ந்து நிதிக்குழு ஒப்புதல் அளித்த பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close