அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 12:37 pm
madurai-hc-sent-a-notice-to-minister-vijayabaskar

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் முறையாக வாகன உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தில் சென்று மோட்டார் வாகன சட்டத்தை மீறியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கடந்த நவம்பர் 8ம் தேதி மதுரையில் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தி பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தது குறித்து அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close