மறைந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:12 pm
tribute-to-nel-jayaraman-s-body

மறைந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாரம்பரிய நெற்பயிர்களை பாதுகாத்து வந்த நெல் ஜெயராமன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால், சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயராமன் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்னா நகரில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயராமன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட நெல் ஜெயராமனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மீட்டெடுத்த நெல் ரகங்களில் காப்புரிமையை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதி பொருள் இல்லாத இயற்கை வேளாண்மையை புதுப்பிக்க நம்மாழ்வாரோடு களப்பணி செய்தவர் ஜெயராமன் அவரது நினைவாக நெல் ஜெயராமன் பெயரில் அழிந்த நெல் ரகங்களை மீட்டெடுக்க நெல் ஆய்வு கூடம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "இந்த மண்ணை பேரன்பு கொண்டு நேசித்தவர் நெல் ஜெயராமன். அவர் கண்டுபிடித்த ஒவ்வொரு நெல் பயிர்களிலும் அவருடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். வேளாண்மை மீள் எழுச்சி பெற வேண்டும் என்ற அவரது எண்ணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும். அதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என கூறினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி, " விவசாயத்தை காப்பாற்ற தன் வாழ்நாளை அற்பணித்தவர். இயற்கை விவசாயம் கார்ப்பரேட் விவசாயமாக மாறி வரும் நிலையில், விவசாயத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கார்ப்பரேட் விவசாயத்திற்கு முடிவு கட்டுவதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என தெரிவித்தார். 

இதேபோல், ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமுருகன் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விதைகள் தான் வருங்கால கார்பரேட் கம்பெனிகள் பேராயுதம். எதிர்கால சமுதாயத்திற்காக விதைகளை மீட்டெடுத்து தமிழ் இனத்தின் சொத்தாக்கியுள்ளார். அவரது களப்பணியை அரசு எடுத்து செய்ய வேண்டும். பாரம்பரிய விதைகள் அவரின் பெயரை சொல்லும். ஜெயராமனின் இழப்பு பேரிழப்பு. அவர் விட்டு சென்ற பணியை நாம் தொடர வேண்டும்"  என கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close