அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 03:14 pm
weather-forecast

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மரக்காணத்தில் 8 செ.மீ விருத்தாசலத்தில் 7 செ.மீ திருக்செங்கோட்டில் 4 செ.மீ மயிலாடுதுறையில் 3 செ.மீ காரைக்குடி, வந்தவாசியில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close