சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: தி.மு.க எம்.எல்.ஏக்கள் வருகை!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 04:06 pm
dmk-comes-for-tn-special-assembly

மேகதாது அணை தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற இருப்பதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் சற்றுமுன் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அதற்கு தமிழ்கத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதோடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

அதன்படி, ஆளுநர் உத்தரவின்பேரில், சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலர் நேற்று அறிவித்தார். அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டமானது நடைபெற இருக்கிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ள இந்த கூட்டத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் சற்றுமுன் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close