மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 04:12 pm

special-tn-assembly-meeting

மேகதாது அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து அதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதோடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

அதன்படி, ஆளுநர் உத்தரவின்பேரில், சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலர் நேற்று அறிவித்தார். அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கியுள்ளது. 

இதில், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.