மேகதாது தீர்மானம் குறித்து பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:53 pm
mekedatu-dam-cm-writes-to-pm-after-assembly-resolution

மேகதாது அணை விவகாரத்தில், இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலுடன் கட்டுமான பணிகளை நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டம் அழைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்டக்கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்த கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடிதத்துடன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் அனுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close