தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 09:15 am
the-decline-in-petrol-and-diesel-prices

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 42 காசுகள் குறைந்து ரூ.73.57க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் வேகமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.  அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அக்டோபர் 17-ஆம் தேதி டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. 

இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் மீதான வரியில் ரூ.2.50ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், பாஜக ஆளும் சில மாநிலங்களும் மாநில அரசு வரியில் ரூ.2.50ஐ குறைத்தன. இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17ம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.  

இதையடுத்து, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையத் தொடங்கியதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் அக்.18ம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கின.இதனால், வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதேபோல், இன்றும் (டிச.7) சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 42 காசுகள் குறைந்து ரூ.73.57க்கும், டீசல் லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து, ரூ.69.19க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close