இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 09:44 am
prime-minister-modi-s-top-in-instagram

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின் தொடர்பாளர்களால் உலக தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில் 4.3 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்து வரும் பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 1.48 கோடி. இதேபோல், 2வது இடத்தில் இருக்கும் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை 1.22 கோடி பேரும், 3வது இடத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 1 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். 

மேலும், பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவை சந்தித்து பேசிய புகைப்படத்திற்கு அதிக விருப்பங்கள் குவிந்தன. இதன் மூலம்,  உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றதுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close