மேகதாது விவகாரம் தொடர்பாக இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 10:45 am
the-governor-of-tamil-nadu-meets-the-prime-minister-today-on-the-issue-of-mekethatu

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். 

கர்நாடகாவில் மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய நீர் வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான அனுமதி வழங்கியுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4ம் தேதி தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள காவிரிப் படுகையில், தமிழக அரசின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் பிரதியை முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு அனுப்பியுள்ளார். 

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மதியம் 1 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்று, மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.  இந்த சந்திப்பின்போது மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close