குட்கா விவகாரம்: சிபிஐ முன் விஜயபாஸ்கர் உதவியாளர் ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 10:48 am
vijayabhaskar-s-aide-apperared-before-cbi

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். 

தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறைகேடாக குட்கா பொருட்களை விற்ற விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விசாரணை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வந்தனர். குட்கா ஆலை உரிமையாளர் மாதவ்ராவ் உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது உதவியாளருக்கும் சிபிஐ போலீசார் சம்மன் அனுப்பினர். இதில் உதவியாளர் சரவணன் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று அவர் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close