கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 11:15 am
karunanidhi-s-statue-opening-ceremony-calling-rajini-and-kamal

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க, ரஜினி, கமல் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக அவரது முழு உருவ சிலை சென்னை அறிவாலய வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைக்கவுள்ளார். 

இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினி மற்றும் கமல் இருவரும் கலைஞருடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள் என்பதால் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close