புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை: அரசு அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 03:41 pm
tn-govt-gives-free-land-to-people

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்து அது தொடர்பாக இன்று அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

2018-2019ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்றும், அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்தும், வருவாய்த்துறையின் மூலம் தனியார் நிலங்களை கையகப்படுத்தி கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா இலவலசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சமீபத்தில் இதுகுறித்து அரசு ஆலோசனை செய்து திட்டம் வரையறை செய்த நிலையில் அதனை அமலுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் இதற்கான தமிழக அரசின் ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசாணையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் நபர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும், தேவைப்பட்டால் தனியாரிடம் இருந்தும் நிலங்கள் பெறப்பட்டு ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 6 மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close