எங்கள் மீது வீசப்படும் சேற்றை இறைத்தாவது தாமரையை மலர வைப்போம்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 03:59 pm
tamilisai-soundara-rajan-press-meet

குளத்திலும் தாமரை மலரும்...களத்திலும் தாமரை மலரும். தாமரை மலருமா? மலராதா? என்பது குறித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்  கவலைப்பட தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, "மேகதாது விவாகரத்தில் முதல் எதிர்ப்பை பதிவு செய்தது பா.ஜ.க தான். அணை சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதற்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, காவிரியில் அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக சார்பில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தாமரை மலருமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பதற்றம் நிலவுகிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக தாமரை மலரும். குளத்திலும் தாமரை மலரும்...களத்திலும் தாமரை மலரும். தாமரை மலருமா? மலராதா? என்பது குறித்து தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் கவலைப்பட தேவையில்லை. எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம். 

முதலில் அவர்கள் கூட்டணியில் ஒரு குழப்பம் நீடிக்கிறது. வைகோ, திருமாவளவன் ஆகியோரால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி வரப்போகிறது. அதனால் அவர் முதலில் அதை பார்க்கட்டும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close