சட்டவிரோதமாக சந்துகடை அமைத்து மது விற்பனை செய்த 18 பேர் கைது! 

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 04:37 pm

18-members-arrested

சேலம் ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக சந்துகடை அமைத்து மதுபானம் விற்பனை செய்து வந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், போதையை அதிகரிக்க மதுவில் ஊமத்தந்தங்காய் சாற்றை கலந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அனைத்து வகையிலான மதுபானங்களும் சந்துகடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த விசாரணையில் சந்துகடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் போட்டியில் அதிக போதைக்காக மதுவில் விஷம் கலந்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓமலூர் டி.எஸ்.பி பாஸ்கரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சட்டவிரோதமாக மதுபானம் விற்போரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அனைத்து காவல் நிலைய போலீசாரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வீடுகள், கடைகள், முட்புதர்கள் போன்ற இடங்களிலும், நடமாடும் மதுக்கடைகள் நடத்தியவர்களையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக அதிக போதைக்காக மதுவில் ஊமத்தங்காய் சாற்றை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து பெரியவடகம்பட்டி மாசிலாமணி, கோணம்பட்டி சேகர், வனவாசி பிரவீன், ரங்கனுர் பரமசிவம், பாப்பம்பாடி, ஏழுமலை, என 18 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Newstm.in 


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.