அது 83 முறை அல்ல...69 முறை - கண்ணாடி உடைந்தது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 04:43 pm
chennai-airport-administration-explains-about-mirror-broken

சென்னை விமான நிலையத்தில் 83வது முறையாக கண்ணாடி உடைந்தது என இன்று காலை செய்தி வெளியானது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இன்று காலை உள்நாட்டு முனையத்தின் 3வது நுழை வாயிலின் 4 கண்ணாடிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன்மூலம் இன்று சென்னை விமான நிலையத்தில் 83வது முறையாக கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது என செய்தி வெளியானது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், "சென்னை விமான நிலையத்தில் 83 முறை கண்ணாடி உடைந்தது என்று கூறுவது தவறு. 69 முறை தான் உடைந்துள்ளது" என விளக்கம் அளித்துள்ளது. 

இதையடுத்து 83க்கும் 69க்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close