நெல் ஜெயராமனுக்கு கண்ணீருடன் விடை கொடுத்த மக்கள்; சொந்த ஊரில் உடல் தகனம்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 04:57 pm
nel-jayaraman-final-ceremony

இயற்கை வேளாண் விவசாயி நெல் ஜெயராமனின் உடல் அவரின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தனர். 

174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு வேளாண்மைக்கு பெருமை சேர்த்தார் நெல் ஜெயராமன். இவர் உடல் நலக்குறைவால் நேற்று (வியாழக்கிழமை) காலை உயிரிழந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பின்னர் சிறிது நேரம் அவரது உடல் அங்கு வைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  

அவர் உயிரிழந்த செய்தி கட்டிமேடு கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அங்கு இன்று காலை நெல் ஜெயராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், ஒரு மணி அளவில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் நெல் ஜெயராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள், விவசாயிகள் எல்லோரும் அவருக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close