கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்... காரணம் என்ன தெரியுமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 05:09 pm
fishes-died-at-kanjipuram-temple

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கோயில் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு திருவிழா தொடங்கியுள்ளது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை தீர்ப்பதற்காக, கோவிலில் நேர்த்தி கடன் செலுத்துவர். மண் சட்டியில் தேங்காய், பழம் வைத்து மாவிளக்கு ஏற்றி, சுவாமியை வழிபடுவது வழக்கம். அப்போது ஏராளமான பக்தர்கள் நல்லெண்ணெய், மஞ்சள்தூள் மற்றும் மாவு பொருட்கள், பொறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கோயிலில் உள்ள குளத்தில் கரைப்பார்கள். இதனால் குளத்து நீரின் மேற்பரப்பு முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக  குளத்தில் உள்ள மீன்கள் ஆக்சிஜனை சுவாசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக மேலேறி வந்தன. இதனால் குளம் முழுவதும் மீன்களின் தலையாக காட்சி அளித்தது. இந்நிலையில் காலை குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் குளம் அமைந்துள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

Newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close