மாணவர்களின் வருகைப்பதிவை பதிவுசெய்ய இனி “பேஸ் ரீடிங்” சிஸ்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 05:16 pm

face-reading-system-introduced-in-tn-schools

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மாணவா்களின் வருகையை பேஸ் ரீடிங் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே கேமரா மூலம் வருகை பதிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூடக்கரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், “அரசு பள்ளி மாணவா்களுக்கு தற்போது மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு முதல் பள்ளி திறந்த 15 நாட்களுக்குள் மடிக்கணிணி மற்றும் மிதிவண்டிகள் வழங்க முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.                                                  

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மாணவா்களின் வருகையை பேஸ் ரீடிங் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே கேமரா மூலம் வருகை பதிவு செய்யப்படும். முதற்கட்டமாக வரும் திங்கள்கிழமை சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளியில் தொடங்கப்படவுள்ளது. அரசின் ஆங்கில வழிக்கல்விக்கு பாடப்புத்தகங்கள் காலதாமதமாக விநியோகிக்கப்படதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அனைத்து பாடப்புத்தகங்களும் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 250 நடுநிலைப்பள்ளிகள் உயா்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயா்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன” எனக் கூறினார்.
 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.