மாணவி தூக்குப்போட்டு தற்கொலை... மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம் !

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 05:21 pm
students-suicide-at-chennai

சென்னை வேளச்சேரியில் மாணவி வறுமை காரணமாகவும், படிக்க பணம் இல்லாததாலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் தமிழ்வாணி (21). சென்னை வேளச்சேரி விஜயநகர் மெயின் ரோட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார். பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியோலாஜி படித்து வந்தார். இந்நிலையில் தமிழ்வாணி தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேளச்சேரி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அவரது அறையை போலீசார் சோதனை செய்தபோது உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் வறுமை காரணமாகவும் படிக்க வைக்க பண வசதி இல்லாததாலும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருக்கின்றார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்வாணியின் தந்தை சிறுவயதிலேயே பிரிந்து சென்று விட்டார் என்றும் அவரது மாமாதான் படிக்க வைத்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்வாணிக்கு மூன்று சகோதரிகள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close