தெலுங்கானா, ராஜஸ்தான் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு! முடிவு எப்போது?

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 05:27 pm

rajasthan-telangana-assembly-elections-updates

மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா, 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. 

தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. தெலுங்கானாவில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. இங்கு 5 மணி நிலவரப்படி 72.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலையொட்டி மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில காவல்துறை உள்பட 50,000 பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இடையிலும், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் அமைத்துள்ள மகா கூட்டணிக்கு இடையிலும் நேரடிப் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. 

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 2,274 வேட்பாளர்களும், 4.74 கோடி வாக்காளர்களும் உள்ளனர். இங்கு மாலை 5 மணி நிலவரப்படி 68.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு மாநிலங்களிலும் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு வரும் 11 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.