மேகதாது அணைக்கட்டுவதை பாஜக எதிர்கிறது: பொன். ராதாகிருஷ்ணன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 05:45 pm
pon-radha-krishnan-press-meet

மேகதாது அணைக்கட்டுவதை தமிழக பாஜக முழுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை புரிந்துக்கொள்ளாத திமுக மற்றும் காங்கிரஸ் பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஏற்படுத்திவருகிறது  என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “மேகதாது அணை கட்டும் விவகாரத்தை தமிழக பாஜக கட்சி முழுமையாக எதிர்கிறது. முழு ஆய்வறிக்கை எடுக்க சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து அங்குள்ள காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சி தொடர்ந்து மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்கு ஆதரவாக இறங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யாதது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டதால் அங்கிருக்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு குற்றசாட்டை கூறி வருகிறார்கள்.

சட்டசபை தீர்மானம் ஒருபுறம் இருக்கட்டும் காங்கிரஸ் மற்றும் திமுக இந்த மேகதாது விவகாரத்தால் வேஷம் போடுவது ஏன்? தமிழக முதல்வர் ஒரு விஷயத்தை தவரவிட்டுள்ளார். இங்கிருக்கும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடகம் அனுப்பியிருக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு அளிக்கப்படும் விகிதாசாரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. ஆய்வு குழு அறிக்கையின் அடிப்படையில் கஜா புயலுக்கான நிவாரணம் வழங்கப்படும். தற்போது உள்ள நிலையில் முதற்கட்டமாக கஜா புயலுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close