ரத யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 07:10 pm
clashes-erupt-between-bjp-workers-cops-in-west-bengal-s-jalpaiguri

மேற்குவங்கத்தில் ரத யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. கூச்பெகரில் இந்த யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று முதல் மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை மேற்கு வங்கத்தில் தொடங்கும் என்றும், யாராலும் அதைத் தடுக்க முடியாது என்றும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சூளுரைத்தார்.  இதையடுத்து இன்று நீதிமன்றத்தின் தடையை மீறி ரத யாத்திரை சென்றதால் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில், போலீசார், பாஜகவினர் ஆகிய இருதரப்பினரும் காயமடைந்தனர். 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close