டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை !

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 09:14 am
plastic-banned-in-trichy-tasmac

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த, வரும் 15ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கூட்டம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லட்சுமி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்றது.  இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாசு கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி, தமிழ்நாடு முழுவதும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்துடாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் எடுத்து கூறினோம் அவர்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.  மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.தொடர்ந்து அவர்கள் பயன்படுத்தி வந்தால் அந்த நிறுவனத்திற்கு சீல் வைப்போம்.பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close