நாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 08:21 am
stalin-to-meet-sonia-gandhi-in-delhi-tomorrow

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக நாளை டெல்லி செல்கிறார் திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.

கருணாநிதியின் உருவச்சிலையை காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி திறந்து வைக்கிறார். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். 

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து அவர் பகல் 11.30 மணியளவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து முறைப்படி விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். தொடர்ந்து அவர் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியாவுடன் ஆலோசிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், அன்றைய தினம் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பூங்கொத்து கொடுத்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close