ஊர், சாலை, தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:50 am
minister-pandiyarajan-press-meet

தமிழகத்தில் ஊர், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடபெற்றுவரும் பாரதி திருவிழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாக்பூரில் பிறந்து தமிழகத்தை தனது தாயகம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சொல்வது தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை என புகழாராம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து, "சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும். இதற்கு அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். மேலும், 2 வாரத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்படும்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close