காங்கிரஸ், திமுக கூட்டணி பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 02:22 pm
kovai-pon-radhakrishnan-press-meet

மேக்கேதாது அணை விவகாரத்தில், காங்கிரஸ் -திமுக கூட்டணி பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது:

மேக்கேதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஒரு விஷயத்தை செய்ய தவறிவிட்டார். மேக்கேதாது விவகாரம் குறித்து பேச, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரையும் சேர்த்து, அவர்களை பெங்களூரு அனுப்பும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானத்தை அவர் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில், காங்கிரஸ் -திமுக கூட்டணி பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றது என்றார் அமைச்சர்.

தஞ்சை பெரிய கோவிலில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது  குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "என்னை பொறுத்தவரை ஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது. ஆலயங்கள் ஆலயமாக மட்டுமே  இருக்க வேண்டும்" என்றார்.

மோடியின் உடை குறித்தும், வெளிநாடு சுற்றுப்பயணம் பற்றியும் வைகோ பேசியது குறித்த கேள்விக்கு, "உடைகளை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது. பிரதமர் மோடி எளிமையான மனிதர்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close