வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 01:45 pm
jayalalitha-memorial-will-be-in-poes-garden

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பொதுமக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக மெட்ராஸ் 'ஸ்கூல் ஆப் சோசியல் நெட்ஒர்க்'  என்ற அமைப்பு சென்னை தேனாம்பேட்டையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 

அதில் ஒரு தரப்பினர், "ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றலாம். அவர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்" என்று கூறினார். 

மற்றொரு தரப்பினர், "போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நினைவகமாக மாறுவதால் பல பிரச்னைகள் நிகழ வாய்ப்புள்ளது. முதியவர்கள் அதிகமாக அந்த பகுதிகளில் வசிக்கிறார்கள். நினைவகமாக மாற்றினால், மக்கள் அதிகமாக வந்து செல்வார்கள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல் பாதிக்கப்படும். எனவே, வேறு இடத்தில் நினைவிடத்தை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

இதனால் வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close