திருச்சி விமான நிலையத்தில் இருவரிடம் ரூ.12 லட்சம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 05:24 am

rs-12-lakh-ceased-from-two-people-in-trichy-airport

மலேசியா செல்ல இருந்து இரண்டு பயணிகளிடம் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில், 12 லட்ச ருபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

திருச்சியிலிருந்து மலேசியா செல்ல இருந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த 2 பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இந்திய ரூபாய் 7 லட்சம், இந்திய மதிப்பில் 5 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரிங்கிட் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close