தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 09:44 am
thoothukudi-sterlite-protest-may-be-happened-again-vaiko

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பு வந்தால் தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்தித்துள்ளார். 

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஸ்டெர்லைட் வழக்கிற்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.

மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான தீர்ப்பு வெளிவரும் என நம்பிக்கை இல்லை. அப்படி ஒரு வேளை வந்தால் நல்லது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பு வந்தால் தூத்துக்குடியில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.  போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம். 

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close