செந்தில்பாலாஜி திமுகவில் சேர மாட்டார்: தங்க தமிழ்ச்செல்வன்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 02:49 pm
thanga-tamil-selvan-press-meet

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் என தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் வேட்பு மனுவை நிராகரிக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன், "முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.கவில் சேருவார் என பரவிய செய்தி உண்மையில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக அரசு முயற்சி செய்து வருகிறது. செந்தில்பாலாஜி ஒருபோதும் தி.மு.கவில் சேரமாட்டார். எனவே தேவையில்லாமல் வதந்தியை பரப்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close