தேர்தல் முடிவுகள் வந்து இரண்டே நாளில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்தது!

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 07:40 am
petrol-rate-increased-again-after-assembly-election-results

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைக் குறைந்து வந்தது, இந்நிலையில் நேற்று முன்தினம் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மீண்டும் இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. இது நடைமுறைக்கு வந்த பிறகு தினதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனையடுத்து  5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக எரிப்பொருள் விலை குறைந்து வந்தது. 

இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்றைய விலையில் எந்த மாறுதலும் இல்லை.

ஆனால், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று, லிட்டர் ரூ.72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல், இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 3 நாட்களாக விலை மாற்றமின்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close