கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை ஒய்.எம்.சி.ஏவில் பார்க்க ஏற்பாடு

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 08:14 am
special-arrangements-for-cadres-in-ymca-to-see-karunanidhi-statue-inauguration

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதனை தொண்டர்கள் பார்க்க ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து,  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதில், சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தொண்டர்களுக்கு  திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் சிலைத்திறப்பு நிகழ்ச்சியை ஒய்.எம்.சி.ஏவில் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close