பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்களை கைகுலுக்கி வரவேற்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 10:41 am
puducherry-assembly-meeting

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, எம்.எல்.ஏக்கள் மூவரும் இன்று சட்டபேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக புதுச்சேரி சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று கூடியுள்ளது. பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் மூன்று பேரின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, இன்று மூவருக்கும் சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கப்பட்டது.

மேலும், சட்டப்பேரவைக்கு வந்த பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், கணபதி, சங்கர் ஆகிய மூவரையும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கைகுலுக்கி வரவேற்றார். 

இதையடுத்து மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, கோபி அனான் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close