குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக சம்மன்

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 08:17 am
gutka-scam-vijayabhaskar-summoned

குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கடந்த வாரமே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்ததால், உதவியாளர் சரவணன் மட்டும் ஆஜரானார்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கரும், ரமணாவும் இன்று ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் என்பதால் ரமணாவும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close