தமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்று வீசும்...!

  டேவிட்   | Last Modified : 16 Dec, 2018 01:13 am
imd-announcement-regarding-phethai-cyclone

தென் கிழக்கு வங்ககடலில் நிலவி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெதாய் (phethai) புயலாக வலுப்பெற்றுள்ளது.- 17ம் தேதி நண்பகல் மசூலிப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெதாய் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து மணிக்கு 17கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது  நேற்றிரவு (சனிக்கிழமை) சென்னைக்கு தென் கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்த தென் கிழக்கே 770கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.  இது வலுப்பெற்று தீவிர புயலாக மாறி வரும் 17தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்க்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையை பொருத்த வரை வரும் 16ம் தேதி வடதமிழக கடலோர  பகுதிகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16ம் தேதி தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழையும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வரும் 17 ம் தேதி அதிகனமழை முதல் மிககனமழை (அதிகபட்சம் 20 செ.மீ ) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒடிசா,தெற்கு சத்தீஸ்கர்,ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 16,17 தேதிகளில் கனமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் குறித்த பிரத்யேக முன்னெச்சரிக்கை  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரா,வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு  பலத்த காற்று வீசும் என்றும், அதே போல் மத்திய ஆந்திர கடற்பகுதி மற்றும் புதுவை யானம் பகுதியில் 80ல் இருந்து 90கிலோ மீட்டர் வரையும் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆந்திரவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா,குண்டூர் மற்றும் புதுவை மாநிலத்திற்கு உட்பட்ட யானம் உள்ளிட்ட மாவட்டத்தின் கடலோர பகுதிகளில்   குடிசை வீடுகள், மின் கம்பங்கள் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close