அழைப்பு இல்லாததால் ஒதுங்கிய அழகிரி... அடுத்தது என்ன?

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 05:11 pm
alagiri-misses-karunanidhi-statue-unveiling

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தேசிய தலைவர்கள், பல மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிலையில், அவரது மகன் முக.அழகிரி வராதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த பின்னர், கட்சியில் மீண்டும் சேர அழகிரி முயன்று வந்தார். ஆனால், புதிய கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முக ஸ்டாலின், 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டார். அதன்பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மெகா பேரணியை நடத்திய அழகிரி, தொடர்ந்து கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. தேசிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் அழகிரி கலந்துகொள்வது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "சிலை திறப்பு விழாவை நாங்கள் டிவி-யிலேயே பார்த்துக் கொள்கிறோம்" என கூறினார். அழகிரி மீண்டும் கட்சியில் சேர்வதை விரும்பாத ஸ்டாலின் தரப்பு, அவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்ததாலேயே, அழகிரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து தன்னை மீண்டும் கட்சியில் இணைக்க காய் நகர்த்தி வருவதை நம்பி இருந்த அழகிரி, சிலைதிறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த என்ன அஸ்திரத்தை கையில் எடுக்க உள்ளாரோ, என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close