கருணாநிதியின் வழியை பின்பற்றிய மு.க.ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 08:25 am
mk-stalin-invites-rahul-gandhi

கருணாநிதி இந்திராகாந்தி மற்றும் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தது போல், அவரது வழியை பின்பற்றி ஸ்டாலின், ராகுல் காந்தியை அதே மொழி நடையில் வரவேற்றுள்ளார். அவர், 'ராகுல் காந்தியே வருக! நல்லாட்சி தருக!' என அழைப்பு விடுத்துள்ளார்.

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வா் நாராணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்திராகாந்தி மற்றும் சோனியா காந்தியை கருணாநிதி வரவேற்றது போல், அவரது வழியை பின்பற்றி ஸ்டாலின், ராகுலை வரவேற்றுள்ளார். 

1980ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக வேண்டும் என கருணாநிதி குரல் கொடுத்தபோது, 'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!' என்றார். அதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டு சென்னை தீவுத்  திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியை குறிப்பிடும்போது 'இந்திராவின் மகளே வருக! இந்தியாவின் திருமகளே வருக!' என்று முழக்கமிட்டார்.

தற்போது கருணாநிதியின் வழியை பின்பற்றி அவரது மகனும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை அதை மொழிநடையில் வரவேற்றுள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் 'ராகுல் காந்தியே வருக!  நாட்டுக்கு நல்லாட்சி தருக!' என வரவேற்றுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close