வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு...

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 02:29 pm
vaikunda-ekathasi-festival

வைணவ ஸ்தலங்களான பெருமாள் ஆலயங்களில் இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அனைத்து வைணவ ஸ்தலங்களிலும் நடைபெற்றது. கும்பகோணம் நாச்சியார் கோவிலிலும், சீனிவாச பெருமாள் கோவிலிலும், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியே சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். 

இதேபோல், சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close