திருட்டுப் பூட்டுக்கு ஏன் பாதுகாப்பு: போலீசாரிடம் விஷால் வாக்குவாதம்

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 11:55 am
vishal-argues-with-police

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷாலின் எதிர் தரப்பினரால் போடப்பட்ட பூட்டுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுப்பதை அடுத்து இன்று அச்சங்கத்தின் தலைவர் விஷால் இன்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். 

பொதுக்குழுவில் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையான முடிவை விஷால் எடுப்பதாகவும், 7 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் கூறி தி.நகர் மற்றும் அண்ணாசாலையிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசுகையில், " தயாரிப்பாளர் சங்க பணத்தை விஷால் கையாடல் செய்திருப்பதாக தெரிகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. கூட்டங்களுக்கு அவர் வருவதே இல்லை. அதனால் சங்க அலுவலகத்தை பூட்டி, அதன் சாவியை முதல்வரிடம் வழங்க இருக்கிறோம்" என்றார். 

பின்னர் பேசிய ஜே.கே.ரித்தீஷ், "விஷால் மீது பணம் கையாடல் செய்ததற்காக அவர் மீது முதல்வரிடம் புகார் கொடுக்க உள்ளோம். முதல்வரின் அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் புகாரளிப்போம்" என்றார்.  

இந்நிலையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அந்த பூட்டை உடைக்க தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இதனையடுத்து போலீசாருக்கும் விஷால் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருட்டுப்பூட்டுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது என்று விஷால் கேள்வி எழுப்பினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close