அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு: தலைமறைவாக உள்ள தற்காலிக ஊழியருக்கு வலைவீச்சு

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 12:27 pm
anna-university-question-paper-issue

அண்ணா பல்கலைகழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது, திடீர் திருப்பமாக தற்காலிக ஊழியர் ஒருவர் வினாத்தாளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 7ம் தேதி நடைபெறவிருந்த கணித தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முன்பே வெளியானதாக பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புகார் அளித்தார். இதுகுறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார், இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர்களுக்கு வினாத்தாள் விற்பனை செய்தது பல்கலைக்கழக தற்காலிக ஊழியர் காஞ்சனா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள காஞ்சனாவை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், ரகசிய பணிகளில் தற்காலிக ஊழியரை நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close