பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 21 Dec, 2018 12:39 pm
writer-prabanjan-passed-away

புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

புதுவையை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவர் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது  பெற்றவர். இதே போல தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். 

இவர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மதகடிப்பட்டில் உள்ள அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து  வந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close